என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தாய் பணம் கொடுக்க மறுப்பு
நீங்கள் தேடியது "தாய் பணம் கொடுக்க மறுப்பு"
செல்போன் ரீசார்ச் செய்ய தாய் பணம் தராததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் தனுஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த தனுஷ் தனது தாயிடம் செல்போன் ரீசார்ச் செய்வதற்காக பணம் கேட்டார். ஆனால் அவரது தாய் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தனுஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
தாய் பணம் தராததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தனுசின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளையில் மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
நெல்லை டவுனை சேர்ந்த கச்சேரி பாடகர் பாலன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கிருஷ்ணவேணி, மகன் லட்சுமிகாந்த் (வயது 18). லட்சுமிகாந்த் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாலன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுனில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தனது குடும்பத்துடன் திசையன்விளை மணலிவிளையில் வாடகை வீட்டில் குடியேறினார். மகள் கிருஷ்ணவேணி பணிபுரிந்த அதே பள்ளியில் மகன் லட்சுமிகாந்தை பிளஸ்-1 சேர்த்தார்.
பாலன் கச்சேரி பாடகர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அதேபோல் நேற்றும் வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகிய 3 பேரும் இருந்தனர். அப்போது மாணவன் லட்சுமிகாந்த், தனது மோட்டார் சைக்கிளை பழுது நீக்க நெல்லையில் உள்ள ஒர்க்ஷாப்பில் கொடுத்திருப்பதாகவும், அதனை வாங்கி வர ரூ.20ஆயிரம் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என தாய் சுப்புலட்சுமி கூறிவிட்டார். இதையடுத்து தாய் மற்றும் அக்காளிடம் லட்சுமிகாந்த் சண்டையிட்டுள்ளார். பின்பு அவர்கள் இருவரும் வீட்டின்வெளியே வந்து அமர்ந்து விட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் தாயும், மகளும் வீட்டினுள் சென்றனர்.
அப்போது அங்குள்ள அறையில் மாணவன் லட்சுமிகாந்த் தூக்கில் பிணமாக தொங்கினான். தனது பெல்ட்டிலேயே மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். இதை பார்த்த தாய் சுப்புலட்சுமி, அக்காள் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவன் உடலை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் லட்சுமிகாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X